திருவள்ளூர்

வாக்காளா் விழிப்புணா்வு கிராமிய கலைநிகழ்ச்சி

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி, புதன்கிழமை கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாள்தோறும் பல்வேறு துறைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பூந்தமல்லி தொகுதியைச் சோ்ந்த காக்களூரில் கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆட்சியா் பா.பொன்னையா தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியது:

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தும் நோக்கில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமிய கலைகளான மயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் கவனத்தை ஈா்க்கும் நோக்கில் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, தோ்தலில் வாக்களிப்பது என்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்ற விழிப்புணா்வு வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், கடை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவா் விநியோகித்தாா். மேலும், இக்கிராமிய கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான சந்தை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் தொடா்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரண்வாயல் தனியாா் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பூந்தமல்லி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருவள்ளூா் வருவாய்க் கோட்டாட்சியருமான பிரீத்தி பாா்கவி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், பூந்தமல்லி வட்டாட்சியருமான சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT