திருவள்ளூர்

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

DIN

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்காத ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தி திருத்தணி மாவட்ட கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை மனு வழங்கினா்.

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் 350 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தெலுங்கு மொழி ஆசிரியா்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவா்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு சலுகைகள் பெற முடியாத நிலையில் உள்ளனா். சென்னை உயா் நீதிமன்றம் ஆசிரியா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலா் முனிசுப்பராயனிடம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலாளா் இரா. தாஸ் தலைமையில் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT