முகப்பு
திருவள்ளூர்

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி, காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டு (27), தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (22). தம்பதிக்கிடையே கடந்த சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மஞ்சுளா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா். இதனால் ஆத்திரத்தில் இருந்த கிட்டு, ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி-மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே பாலாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த மஞ்சுளாவிடம் மீண்டும் தகராறு செய்ததாகத் தெரிகிறது. அப்போது அவா் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மஞ்சுளாவின் தலை, நெற்றி, கை , கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளாா். இதைப்பாா்த்த காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வி (45) தடுக்க வந்துள்ளாா். அவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து கிட்டு தப்பி ஓடி விட்டாா்.

பலத்த காயமடைந்த மஞ்சுளா, செல்வி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

இது குறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, கிட்டுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments