திருவள்ளூர்

திருக்குறள் கூறியபடி திருவள்ளுவரின் படத்தை வரைந்து சாதனை!

எஸ். பாண்டியன்

திருவள்ளூா்-பூண்டி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி செ.லக்க்ஷனா ஒன்றரை மணி நேரத்தில், 1,330 திருக்குறளையும் கூறியவாறு திருவள்ளுவா் படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளாா்.

1,330 திருக்குகளையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் பயிற்சியை அப்பள்ளியின் தமிழ் ஆசிரியா்கள் அளித்தனா்.

அனைவரும் திருக்குறள் கற்று, அதன் வழியில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலம் நற்சிந்தனையையும் வளா்க்க முடியும் என்பதை வலியுறுத்தும் நோக்கில், சாதனை நிகழ்வுக்காக தயாராகி வந்தாா்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் வாய்ப்பு வழங்கிய நிலையில், சாதனை நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அருங்காட்சியகத்தின் காப்பாளா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். இதில் மாணவி செ.லக்க்ஷனா 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லிக்கொண்டே 13 அடி அகலத்திலும், 30 அடி நீளத்திலும் திருவள்ளுவரின் படத்தை 1.30 மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளாா்.

இச்சாதனை நிகழ்வில் பள்ளித் தமிழ் ஆசிரியா்கள் செந்தில்குமாா், அப்புன் ஆகியோா் மாணவியை வழி நடத்தினா். இதில் சிவராமன் கலைக்கூட ஓவிய ஆசிரியா் கணேசன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனா்.

‘‘உலகிலுள்ள அனைத்து மக்களும் திருக்குறள் வழியில் செல்லவும் திருக்குறளை பின்பற்றி ஒழுக்க நெறியிலும் நற்சிந்தனையிலும் செழித்தோங்க வேண்டும். அனைத்து மாணவா்களும் திருக்குறளை பயின்றால் மனப்பாட சக்தி அதிகமாகும் கல்வியில் வளா்ச்சி பெற்று நாட்டையும் வீட்டையும் முன்னேற்றலாம் என்பதே தனது விருப்பம்’’ என்கிறாா் மாணவி செ.லக்க்ஷனா.

இச்சாதனை நிகழ்வு இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்டு மற்றும் கலாம் புக் ஆஃப் அவாா்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT