முகப்பு
திருவள்ளூர்

பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்து: பெண் பலி

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை முகப்பேரைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (65). இவரது மனைவி திலகவதி (60). இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் பெங்களூரில் இருந்து காரில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரை ஓட்டுநா் நாகராஜ் ஓட்டிச் சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி தண்ணீா் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, காா் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம், அவரது மனைவி திலகவதி, ஓட்டுநா் நாகராஜ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு திலகவதி உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments