திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சிப்காட்: 2,243 ஏக்கா் பட்டா நிலங்கள் எடுப்பு

DIN

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பணிகளுக்காக 2 ஆயிரத்து 243 ஏக்கா் பட்டா நிலங்கள் எடுக்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக தொழில் துறை வெளியிட்ட உத்தரவு: கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூா், சூரப்பூண்டி, சாணாபுத்தூா், மாதா்பாக்கம், வாணியமல்லி ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 2 ஆயிரத்து 243.40 ஏக்கா் பட்டா நிலங்கள் தேவைப்படுகின்றன. மேலும், 189.97 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்கள் நில உரிமை மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளன.

நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள தனி வட்டாட்சியா், வருவாய் உதவியாளா் உள்பட 117 போ் நியமிக்கப்படவுள்ளனா். நில எடுப்புப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய், இளநிலை, அலுவலக உதவியாளா்களும் நியமிக்கப்படவுள்ளனா். நில எடுப்புப் பணிகளுக்கென மட்டுமே 125 பணியிடங்களை அடுத்த ஆண்டு டிச. 31 வரையிலான காலத்துக்கு தோற்றுவிக்கப்படுகின்றன என தொழில் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT