திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள்: அமைச்சர் நாசர் இயக்கி வைத்தார்

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் ரூ.24.50 லட்சம் செலவில் 7 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகளை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்தார்.

DIN

ஆவடி மாநகராட்சிப் பகுதியில் ரூ.24.50 லட்சம் செலவில் 7 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகளை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்தார்.
 ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 41-ஆவது வார்டு புதிய ராணுவ சாலை - வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு சாலை சந்திப்பு, 44-ஆவது வார்டில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனை வளாகம், பெரியார் நகர் தகன மேடை, 38-ஆவது தேவி நகர் கழிவு நீரேற்று நிலைய வளாகம், தேவி நகர் முஸ்லிம் மயான வளாகம், 18-ஆவது வார்டு பாபு நகர் அண்ணா சாலை, பாபு நகர் மின் மயானம் ஆகிய 7 இடங்களில் ரூ. 24.50 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கொண்டு வந்தார். பின்னர், அந்தப் பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் கூறிய பிரச்னைகளை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.
 நிகழ்வில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆணையர் தர்பகராஜ், மண்டலக் குழு தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், வி.அம்மு, பொறியாளர் மனோகரன், சத்தியசீலன், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ், கு.சேகர், பகுதிச் செயலாளர் பொன்.விஜயன், மாநகராட்சி உறுப்பினர்கள் சாந்தி, சுமதி, மேகலா, சுகன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT