திருவள்ளூர்

அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்

DIN

மாதவரம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இக்கோயிலில் அன்னை நாகவல்லி முத்துமாரியம்மன் பாலவிநாயகர் பாலமுருகன் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை விக்னேஸ்வர பூஜை எஜமானர் சங்கல்பம் புண்ணிய வாசம் கலச பூஜை பிரம்மச்சாரி பூஜை தம்பதி பூஜை கன்யா பூஜை சுமங்கலி பூஜை கோ பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அம்மன் பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை பூர்ணாகுதி மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT