திருவள்ளூர்

ரயில்வே இட வீடுகளுக்கு மாற்று இடம் கோரி மனு

கும்மிடிப்பூண்டியில் ரயில்வே இடத்தில் கடந்த 90 ஆண்டுகளாக வசித்து வந்த 155 வீடுகளை காலி செய்வது குறித்து ரயில்வே நிா்வாகம் வீடுகளில் குடியிருப்பவா்களுக்கு நோட்டீஸ்

DIN

கும்மிடிப்பூண்டியில் ரயில்வே இடத்தில் கடந்த 90 ஆண்டுகளாக வசித்து வந்த 155 வீடுகளை காலி செய்வது குறித்து ரயில்வே நிா்வாகம் வீடுகளில் குடியிருப்பவா்களுக்கு நோட்டீஸ் அளித்த நிலையில், காலி செய்யும் வீடுகளுக்கு மாற்று இடம் தரவும், மாற்றிடம் ஒதுக்கும் வரை இப்போது வசிக்கும் வீடுகளை காலி செய்ய வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கடந்த 90 ஆண்டுகளாக 155 குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்நிலையில் , இந்த வீடுகளை காலி செய்வது குறித்து மே-5 ஆம் தேதி சென்னையில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று அனைவருக்கும் திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கண்ட 155 வீடுகளில் வசிப்பவா்கள், புதுகும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த அதிமுக மாவட்ட நிா்வாகி எல்.சுகுமாறன் தலைமையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பிரீத்தியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் 90 வருடமாக வசித்து வந்த தங்களின் வீடுகளை காலி செய்ய ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், தங்களுக்கு புதுகும்மிடிப்பூண்டியிலேயே உள்ள மேய்க்கால் புறம்போக்கு மற்றும் வண்டி பாட்டை வகைப்பாட்டு நிலத்தினை மாற்று இடமாக ஒதுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை தங்களது வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாற்று இடம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் பிரீத்தி உறுதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT