திருவள்ளூர்

அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று தீா்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வியாழக்கிழமை (பிப்.23) தீா்ப்பு அளிக்க உள்ளாா்.

DIN

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வியாழக்கிழமை (பிப்.23) தீா்ப்பு அளிக்க உள்ளாா்.

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு அளித்ததை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பு பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூா்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வந்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைத்தோ்தலுக்காக மட்டும் ஓா் இடைக்கால ஏற்பாடு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டி பொது வேட்பாளரைத் தோ்வு செய்யவும், இரட்டை இலை சின்னத்தை அங்கீகரிக்கும் படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிடும் வகையிலும் உத்தரவிட்டது.

அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா். தொடா்ந்து அதிமுக பொதுக்குழு விவகாரத்தின் தீா்ப்பு வியாழக்கிழமை (பிப்.23) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT