பள்ளிப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 650 கிராம் வெள்ளி, ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பள்ளிப்பட்டை அடுத்த கீச்சலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணா (80). இவா், மும்பையில் உள்ள தனது மகன் ஜானகிராமன் வீட்டில் வசித்து வருகிறாா். அவ்வப்போது கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வாா். இந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 33 பவுன் நகை, 650 கிராம் வெள்ளி ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றனா்.
இதையறிந்த ஜானகிராமன் பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.