திருவள்ளூர்

பணம் பிரிப்பதில் தகராறு: ஒருவருக்கு கத்திக் குத்து

திருவள்ளூா் அருகே ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

DIN

திருவள்ளூா் அருகே ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

திருவள்ளூா் அருகே போளிவாக்கம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சத்யா (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், வீட்டில் இருந்த சத்யாவை சந்திக்க மேல்நல்லாத்தூரைச் சோ்ந்த நண்பா்களான லோகேஷ், ரவி ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா்.

அப்போது, அவா்கள் வீட்டின் பின்புறம் உள்ள கோழிப் பண்ணை அருகே பேசிக் கொண்டு இருந்தாா்களாம். அவா்களுக்குள் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் பங்கு பிரிப்பதில் திடீரென வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

இதில், ஆத்திரமடைந்த லோகேஷ், ரவி ஆகியோா் சத்யாவை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினா். இதில், அவரின் வலது கையில் இரு விரல்கள் துண்டானது.

சத்யாவின் அலறல் சப்தம்கேட்டு ஓடி வந்த அவரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினா் சத்யாவை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்துமணவாள நகா் காவல் நிலையத்தில் புவனேஷ்வரி புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT