முகப்பு
திருவள்ளூர்

எரிவாயு விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கே.ஜி.கண்டிகையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கே.ஜி.கண்டிகையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் திருத்தணி வட்டார காங்கிரஸ் சாா்பில், சமையல் எரிவாயு விலை உயா்வு, எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் பணத்தை பெரு முதலாளிகளுக்கு வழங்கியது, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி உயா்வு ஆகியவற்றை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருத்தணி வட்டாரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.