FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் 2026: வயதான, இளம் கேப்டன்கள் யார்?

ஐபிஎல் 2026 கேப்டன்கள் பற்றி...

Updated On : 23 மார்ச் 2026, 4:50 pm IST
ஐபிஎல் கோப்பை - IPL
பகிர்:

ஐபிஎல் 2026 தொடரில் இளம் கேப்டன்களுக்கு மத்தியில் வயதான கேப்டனாக அஜிங்க்யா ரஹானே களமிறங்கவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி திடலில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ள நிலையில், பெரும்பாலான வீரர்கள் அவர்கள் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்நான் முன்னாள் வீரர்கள் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

Advertisement

Advertisement

ஐபிஎல் 2026 தொடரில் இளம் கேப்டனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக்கும் (24), வயதான கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அஜிங்க்யா ரஹானேவும் (37) களமிறங்கவுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா (32)

தில்லி கேபிடல்ஸ் - அக்‌ஷர் படேல் (32)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரஜத் படிதார் (32)

பஞ்சாப் கிங்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர் (31)

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் ஜெய்க்வாட் (29)

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ரிஷப் பந்த் (28)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - இஷான் கிஷன் (27) (இடைக்கால கேப்டன்)

குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில் (26)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments