FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஜிங்க்யா ரஹானேவுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜூலை 2026, 4:06 pm IST
புஜாரா - ரஹானே - படம் | சித்தேஸ்வர் புஜாரா (எக்ஸ்)
பகிர்:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஜிங்க்யா ரஹானேவுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூலை 30) அறிவித்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்த அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள அஜிங்க்யா ரஹானேவுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய சித்தேஸ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் நம்பமுடியாத விதத்தில் அமைந்துள்ள உங்களது பயணம் குறித்து நீங்கள் பெருமை கொள்ளலாம். உங்களுடைய இந்த சிறப்பான சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு எனது வாழ்த்துகள். பல ஆண்டுகளாக உங்களுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன்.

களத்துக்கு உள்ளே மட்டுமின்றி, களத்துக்கு வெளியேயும் உங்களுடான நினைவுகள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்பட்டபோது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்ன் மற்றும் காபா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian player Cheteshwar Pujara has wished Ajinkya Rahane a bright future following his announcement of retirement from international cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments