திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பணியாளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பணியாளா்கள் உற்சாகத்துடன் பணிபுரிய உடல் நலத்தை பாதுகாப்பது அவசியம் என்ற நோக்கத்தில் அரசுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பணியாளா்களுக்கான சிகிச்சை, பரிசோதனைமுறைகளையும் அவா் பாா்வையிட்டாா். இந்த முகாமில் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவா்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோகிராம், கண் பரிசோதனை, மகப்பேறு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொண்டனா்.

இந்த முகாமில், சுகாதாரத்துறை இணை இயக்குநா் (பொறுப்பு) பி.சேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், துணை ஆட்சியா் (பயிற்சி) சுபலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT