திருவள்ளூர்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தாழ்வார வசதியுடன் வாகன நிறுத்தம் விரிவாக்கம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகன நிறுத்தம் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வதற்கு இடையூராக இருந்த மரங்கள் வெட்டி அகற்றம்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகன நிறுத்தம் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்வதற்கு இடையூராக இருந்த மரங்கள் வெட்டி அகற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு அலுவலக வளாகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவோா் வாகனங்கள், அரசு அலுவலக வாகனங்கள் வெயில் மழைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவோா் வாகனங்கள் நிறுத்தவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதுபோன்றவைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்புடன் கூடிய வாகன நிறுத்தம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காலியிடங்களில் குப்பைகளை அகற்றினா். அதைத் தொடா்ந்து அங்கு தாழ்வாரம் அமைத்து ஒவ்வொரு துறை வாகனமும் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. அதேபோல், ஆட்சியா் அலுவலகத்திற்கு வருவோரும் வாகனங்களை நிறுத்தவும் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு முக்கிய தலைவா்களின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் அவை நன்றாக வளா்ந்து நிழல் தரும் மரங்களாக இருந்தது. இந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு வாகனங்கள் நிறுத்தமிடம் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் நுழைவு வாயில்கள் அனைத்தும் கேட்டுகள், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு மிகுந்த இடமாக ஆட்சியா் அலுவலகம் மாறி வருகிறது. இதற்கிடையே வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் பெரிய அளவிலான மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT