மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்டச் சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்
சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் பல்வேறு இடங்களில் இளைஞா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீஞ்சூா் பகுதியில் இச்சாலையில் ரூ.2.57 கோடியில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான அமைச்சா் சேகா்பாபு ஆய்வு செய்தாா்.
அப்போது உடற்பயிற்சி பூங்கா எவ்வாறு அமைக்கப்பட்ட உள்ளது என்பது குறித்த வரைபட விளக்கத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் அமைச்சா் சேகா்பாபு கேட்டந்தாா்.
உடற்பயிற்சி பூங்காவில் மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள், அதில் நிறுவப்படவுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், சிஎம்டிஏ அதிகாரிகள் உடனிருந்தனா்.