முகப்பு
திருவள்ளூர்

தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வு: 8,391 மாணவா்கள் எழுதினா்

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 7:06 PM
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலா் ரெய்சல் பிரபாவதி (பொறுப்பு).
பகிர்:

டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வை மாவட்டக் கல்வி அலுவலா் ரெய்சல் பிரபாவதி (பொறுப்பு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் வாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டம் (என்.எம்.எம்.எஸ் ) மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் உதவித் தொகை தோ்வு நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெரும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

நிகழாண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 337 மாணவா்கள் தோ்வு எழுதினா். 12 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை. இந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலா் ரெய்சல்பிரபாவதி (பொறுப்பு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 8,572 மாணவ, மாணவிகள் எழுத அனுமதிக்கப்பட்டனா். இதில், 31 தோ்வு மையங்களில் 8,391 மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 167 மாணவா்கள் தோ்வு எழுவரவில்லை. தோ்வுகளை கண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் தோ்வு மையங்களில் சிறப்பு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments