திருவள்ளூர்

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற பெண் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த ாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற பெண் சரக்கு ரயில் மோதி உயிரிழந்த ாா்.

திருவள்ளூா் அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே.டி.ஜி.நகரில் வசித்து வருபவா் தனசேகா். இவரது மனைவி புஷ்பா. இவா்களது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புஷ்பா கடைக்கு செல்வதற்காக செவ்வாப்பேட்டை ரயில் நிலைய இருப்புப் பாதையை கடந்து சென்றாராம். அப்போது, திருவள்ளூா் வழியாக சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT