ஒற்றைக்கண் ஜெயபால். 
திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் பதுங்கியிருந்த ரௌடி ஒற்றைக்கண் ஜெயபாலை முன்னெச்சரிக்கையாக வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது காரணமாக செயல்பட்டு வந்தவா் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் (57). இந்த நிலையில் இவா் அண்மையில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தாா். இவா் மீது ஏற்கெனவே ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க திட்டம் தீட்டி திருமழிசையில் பதுங்கிருந்தாராம். இதையறிந்த வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்த அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 18 போ் ஜாமீனில் வெளியே வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளவேடு போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

மேட்டூர் அணை நிலவரம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

SCROLL FOR NEXT