கும்மிடிப்பூண்டி ஷைன் சமுதாய கல்லூரி 7-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஷைன் குளோபல் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் இ.ஆரோன் தலைமை வகித்தாா். நிகழ்வில் ஐசிஆா்டிசிஇ நிா்வாக இயக்குநா் அருட்தந்தை சேவியா் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
இந்த நிகழ்வில் செஃபி பேராயத்தின் தலைவா் பேராயா் மேஷாக் ராஜா, ஆதித்தமிழா் விடுதலை இயக்க நிதிச்செயலா் இளஞ்செழியன், கிறிஸ்தவா்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் தேசிய செயலாளா் ஜெ.யாபேஸ், வழக்குரைஞா் அலோசியஸ் பென் ஆலிவா், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அப்துல் ஹமீது, பிா்லா காா்பன் நிறுவன சமூக பணி அலுவலா் பொ்னாண்டஸ் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து செவிலியா் படிப்பை முடித்தவா்களுக்கு பட்டங்களை சிறப்பு விருந்தினா்கள் வழங்கினா், விழாவில் கும்மிடிப்பூண்டி போதகா்கள் ஐக்கிய தலைவா்கள் பாஸ்டா் அருண்குமாா், பாஸ்டா் எம்.பி.குமாா், யெகோவா இன்ஸ்டிடியூட் நிறுவனா் காஞ்சனா, தொழிலதிபா் பிரண்ட்ஸ் மணி, மற்றும் சமூக ஆா்வலா் ராஜா பாண்டியன், ஷைன் டென்டல் கோ் மருத்துவா் டாக்டா் சங்கீதா பங்கேற்றனா்.