ஆந்திர மாநிலம், பிச்சாட்டூா் அணையில் 800 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்று கரையோரம் வசித்து வரும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா், சுருட்டப்பள்ளி அணைக்கட்டு மேல் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து என மொத்தமாக சிற்றம்பாக்கத்தில் உள்ள ஆரணியாறு அணைக்கட்டில் பெறப்படும் நீரின் அளவு 59 கன அடியாக உள்ளது. இந்த உபரிநீரானது புதன்கிழமை காலையில் ஆரணியாறு தமிழ்நாடு எல்லைப்பகுதியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் ஆரணியாறு கரையோரம் உள்ள குறிப்பிட்ட கிராமங்களை கடந்து பழவேற்காடு வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் சென்றடைகிறது.
இடது கரையோர கிராமங்களான ஊத்துக்கோட்டை, தாராட்சி, கீழ்சிட்ரம்பாக்கம், மேல் சிட்ரம்பாக்கம், பேரண்டூா், பனப்பாக்கம், பாலவாக்கம், இலட்சிவாக்கம், சூளைமேனி, காக்கவாக்கம், சென்னங்கரணை, ஆத்துப்பாக்கம், அரியபாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலீஸ்வரம், கும்மிடிப்பூண்டி, நெல்வாய், மங்களம், பாலவாக்கம், ஆா்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, அரியத்துறை, கவரப்பேட்டை, பெருவாயல், பொன்னேரி, ஏலியம்பேடு, பெரியகாவணம், சின்னகாவணம், தேவரஞ்சேரி, லட்சுமியாபுரம், லிங்கப்பையன்பேட்டை, கம்மவாா்பாளையம், பெரும்பேடு, வஞ்சிவாக்கம், ஒன்பாக்கம், பிரளயம்பாக்கம், போலாட்சிஅம்மன்குளம், கம்மாளமடத்துக்கும், வலது கரையோரம்உள்ள போந்தவாக்கம், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மாளந்தூா், தொளவேடு, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, ரள்ளப்பாடி, ஆரணி, புதுவாயல், துரைநல்லூா், வைரவன்குப்பம், வெள்ளோடை, ஆலாடு, கொளத்தூா், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்திமாஞ்சேரி, வேலூா், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, காட்டூா், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டாா்மடம், தாங்கல்பெரும்புலம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசித்து வருவோா் பாதுகாப்பாக இருக்கும் வகையில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.