திருமலையில் 17,936 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 17,936 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,038 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 17,936 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,038 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஆன் லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.