திருமலையில் 19,256 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 19,256 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,368 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 19,256 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,368 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் திருமலைக்குச் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக செல்லலாம். கரோனா விதிமுறைப்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.