திருப்பதி

திருமலையில் 21 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 21,538 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 21,538 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று காரணமாக, விரைவு தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். எனவே, ஞாயிற்றுக்கிழமை 21,538 பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்; 11,164 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1 ம் தேதி முதல் ஆக. 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT