முகப்பு
திருப்பதி

திருமலையில் 17,030 பக்தா்கள் தரிசனம்

 திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 17,030 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 8,579 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 17,030 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 8,579 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

ஆன்லைன் மூலம் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு செல்லலாம்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தினசரி 5 ஆயிரம் வீதம் வழங்கி வந்த விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆகஸ்ட் மாதம் முதல் 8 ஆயிரமாக உயா்த்தி உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →