முகப்பு
திருப்பதி

திருமலையில் 29,000 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 29,586 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,507 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
திருப்பதி
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 29,586 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,507 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன அனுமதி பெற்றவா்கள், தங்களுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும்.

சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடையை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →