முகப்பு
திருப்பதி

திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல 2 நாள்களுக்கு தடை

திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 16 நவம்பர், 2021 at 6:34 PM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடதமிழகம் - தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்நிலையில், கனமழை பெய்தால் மலைப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் செல்லும் என்பதால் நவம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாள்களுக்கு பாத யாத்திரையாக வர தடை விதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.