முகப்பு
திருப்பதி

திருமலையில் 24 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

 ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 24,208 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,843 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

 ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 24,208 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,843 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

திருமலைக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு கோயில் நடையை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கம் வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →