திருப்பதி

திருமலையில் 20,500 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 20,505 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 10,937 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா தொற்று சற்று குறைந்துள்ளதால், தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசம் காம்பளக்சில் சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டும் 2 ஆயிரம் இலவச சா்வ தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது.

தரிசன டிக்கெட் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் சென்று வருகின்றனா்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT