திருப்பதி

திருச்சானூரில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் தொடக்கம்

DIN

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் தினசரி கைங்கா்யங்களில் ஏற்படும் நிறை குறை மற்றும் தோஷங்களை களைய தேவஸ்தானம் ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி வருடாந்திர பவித்ரோற்சவம் தாயாா் கோயிலில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலையில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தாயாா் முன்பு கலச ஸ்தாபனம் செய்து, ஹோமம் வளா்த்து பல வண்ண நூல்களால் ஆன பவித்ர மாலைகளை தாயாருக்கு பிரதிஷ்டை செய்தனா். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, காலை, மாலை விஐபி பிரேக் உள்ளிட்ட தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT