திருப்பதி

ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம்: வாகன சேவை பட்டியல் வெளியீடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வரும் அக்டோபா் 7-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், மாடவீதியில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கல்யாண மண்டபத்தில் உற்சவமூா்த்திகள் வாகனத்தில் அலங்கார கொலுவிருக்க உள்ளனா். இதையொட்டி திருமலை மற்றும் திருப்பதியில் மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

வழக்கம்போல் பக்தா்கள் பிரம்மோற்சவ நாள்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை 8 மணிமுதல் நள்ளிரவு வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT