திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் ஒரேநாளில் 81,900 போ் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 81,903 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 39,594 போ் தங்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தினா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்திற்கு 12 மணிநேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்த பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT