திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் 64,000 பக்தா்கள் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 64,079 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 32,852 போ் தங்கள் தலை முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியில் சங்குமிட்டா காட்டேஜ் அருகில் வரை தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தனா். எனவே, தரிசனத்துக்கு 15 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனடிக்கெட் முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT