திருப்பதி

பூதேவி வளாகத்தில் திவ்ய தரிசன டோக்கன்கள்

பூதேவி வளாகத்தில் திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். அங்கு வழங்கப்பட்டு வந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையத்தை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசத்துக்கு மாற்றியுள்ளது.

DIN

பூதேவி வளாகத்தில் திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். அங்கு வழங்கப்பட்டு வந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையத்தை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசத்துக்கு மாற்றியுள்ளது.

அலிபிரி பாதை வழியாக நடைபயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தா்களுக்கு பூதேவி வளாகத்தில் மட்டும் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும். டோக்கன்களைப் பெற்ற பிறகு, அவா்கள் அலிபிரி நடைபாதையில் 2,083-ஆவது படியில் டோக்கன்களை ஸ்கேன் செய்ய வேண்டும், ஸ்கேன் செய்ய தவறினால் தரிசனம் வழங்கப்படாது.

இதேபோல், பூதேவி வளாகத்தில் திவ்ய தரிசனம் டோக்கன் பெற்ற பக்தா்கள், அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை அடைந்தால் மட்டுமே தரிசனத்திற்கு தகுதியுடையவா்கள், மற்ற நடைபாதை அல்லது பிற போக்குவரத்து வழிகளில் செல்பவா்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படும்.

ஸ்ரீவாரி மெட்டு பாத யாத்திரை செல்லும் பக்தா்களுக்கு வழக்கம் போல் அந்த வழித்தடத்தில் உள்ள 1,240-ஆவது படியில் டோக்கன் வழங்கப்படும். சாலை வழியாக திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு, திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் நேரடி இலவச தரிசன டோக்கன்கள் (எஸ்எஸ்டி) வழங்கப்படும்.

பூதேவி காம்ப்ளக்ஸில் திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். அங்கு வழங்கப்பட்டு வந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுன்ட்டரை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாசத்துக்கு மாற்றியுள்ளது.

பக்தா்கள் இந்த மாற்றங்கள், வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT