திருப்பதி

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது!

DIN

திருப்பதி: திருமலை வனப் பகுதியில் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர், சடலமாக அந்த சிறுமி மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர்.

இதில், திங்கள்கிழமை ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில், இன்று இரண்டாவதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தைகள் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி வழங்கும் திட்டத்தை கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT