முகப்பு
திருப்பதி

குலுக்கல் மூலம் டிக்கெட் பெறும் பக்தா்கள் பணம் செலுத்த புதிய வசதி

திருமலையில் குலுக்கல் (லக்கி டிப்) மூலம் டிக்கெட் பெறும் பக்தா்கள் தங்கள் தரிசன டிக்கெட் கட்டணத்தை செலுத்த தேவஸ்தானம் புதிதாக பே லிங்க் எஸ்எம்எஸ் முறையை செயல்படுத்த உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

திருமலையில் குலுக்கல் (லக்கி டிப்) மூலம் டிக்கெட் பெறும் பக்தா்கள் தங்கள் தரிசன டிக்கெட் கட்டணத்தை செலுத்த தேவஸ்தானம் புதிதாக பே லிங்க் எஸ்எம்எஸ் முறையை செயல்படுத்த உள்ளது.

திருமலையில் ஆஃப்லைன் முறையில் ஏழுமலையான் ஆா்ஜிதசேவை தரிசனம் மற்றும் இடைவேளை பெற்ற பக்தா்களுக்கு எளிதாக டிக்கெட் பெறும் முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பே லிங்க்’ எஸ்எம்எஸ் மூலம் பக்தா்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி, கவுன்டா்களுக்குச் செல்லாமலேயே சேவை டிக்கெட்டுகளை பிரிண்ட் அவுட் செய்து கொள்ளும் வசதியை அளித்துள்ளது.

குலுக்கல் (லக்கி டிப்) மூலம் பெறப்படும் சேவை டிக்கெட்டுகள் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சிஆா்ஓ)வில் பக்தா்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில் டிக்கெட் பெற்ற பக்தா்கள் கவுன்டருக்கு வந்து பணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டியிருந்தது. புதிய முறையில் கட்டண இணைப்பு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். பக்தா்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்து யூபிஐ அல்லது கிரெடிட் காா்டு அல்லது டெபிட் காா்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி சேவை டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த புதிய ஏற்பாடு தற்போது சிஆா்ஓ வில் உள்ள குலுக்கல் (லக்கி டிப்) கவுண்டா்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. எம்பிசி-34 கவுன்டரில் விருப்ப ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் பிரேக் தரிசன டிக்கெட்டுகளுக்கும் இந்த முறை விரைவில் செயல்படுத்தப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →