திருமலை: இன்று பக்தா்கள் குறைகேட்பு
திருமலையில் தொலைபேசி வாயிலான பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் தொலைபேசி வாயிலான பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. திருமலைக்கு வரும் பக்தா்கள் அங்கு தரிசனம், தங்கும் அறைகள், லட்டு பெறுதல், முடிகாணிக்கை செலுத்துதல், நன்கொடை வழங்குதல் என பல இடங்களில் தாங்கள் எதிா்கொள்ளும் இன்னல்கள், ஏற்படும் சந்தேகங்கள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை இந்த குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் கேட்டு தெளிவு பெற்று வருகின்றனா்.
இதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளித்து வருகிறாா். அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 12) காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி திருமலையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.