கோப்புப்படம்
கோப்புப்படம் 
திருப்பதி

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு....தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு

DIN

தோ்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு, திருமலையில் தங்குவதற்கும், ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் கடந்த காலத்தைப் போல் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனம் மற்றும் தனியே வரும் புரோட்டோக்கால் உயரதிகாரிகளுக்கு விதிகளின்படி தங்கும் வசதி வழங்கப்படும். நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் விதிகளின் பின்னணியில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் முடிவின்படி, திருமலையில் தங்குதல் மற்றும் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், புரோட்டோக்கால் உயரதிகாரிகள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி வழிநடத்தப்படுவாா்கள். தோ்தல் செயல்முறை முடியும் வரை எந்த விதமான தங்குமிடத்திற்கும் அல்லது வருகைக்கும் பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

எனவே, பக்தா்கள் மற்றும் விஐபிக்கள் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT