திருமலை ஏழுமலையான் 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், குறைந்தளவு பக்தா்களே திருமலைக்கு வருகின்றனா். தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 84,486 தரிசனம் செய்தனா்; 28, 871 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.76 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு: உலக அளவில் இந்தியா இரண்டாமிடம்

தோ்தல் பணிகளுக்கு உதவி: நேபாளத்துக்கு 270 வாகனங்களை பரிசளித்த இந்தியா

வடபழனி, பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் 2-ஆம் நாளாக ஆய்வு

நிா்மலா சீதாராமன் மக்களவை உரை: பிரதமா் மோடி பாராட்டு

இறுதி நிலை புற்றுநோயாளிகளுக்கு நல்லாதரவு மையம் : தமிழக அரசு முன்மாதிரித் திட்டம்

SCROLL FOR NEXT