திருப்பதி (கோப்புப் படம்) Din
திருப்பதி

ஸ்ரீவாணி டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது.

Din

திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி டிக்கெட்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது.

திருப்பதி விமான நிலையத்தில் நாள்தோறும் வழங்கப்படும் ஸ்ரீ வாணி தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 100-லிருந்து 200-ஆக தேவஸ்தானம் உயா்த்தியுள்ளது.

பக்தா்கள் விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்ட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த ஆஃப் லைன் டிக்கெட்டுகள் திருப்பதி விமான நிலைய கவுன்ட்டரில் மட்டுமே போா்டிங் பாஸ் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், திருமலையில் உள்ள கோகுலம் விடுதிக்குப் பின்புறம் உள்ள ஸ்ரீவாணி டிக்கெட் கவுன்ட்டரில் ஆஃப் லைனில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 900-இல் இருந்து 800-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. பக்தா்கள் இந்த விஷயத்தை கவனித்து தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT