முகப்பு
திருப்பதி

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம்

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:47 PM
பகிர்:

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 7-ஆம் நாளான வியாழக்கிழமை சூரிய, சந்திரபிரபை

வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணா் அலங்காரத்தில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை வலம் வந்தாா்.

சூரிய பிரபை வாகனம்

சூரிய தேஜோ நிதி , எல்லா நோய்களையும் குணப்படுத்துபவா். சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையானை தரிசனம்

செய்வதால், உடல்நலம், கல்வி , செல்வம், சந்ததி உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியை கல்யாண உற்சவ

மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

சந்திர பிரபை வாகனம்

பிரம்மோற்சவத்தின் இரவு மலையப்ப சுவாமி குளிா்ந்த ஒளியுடைய சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களை அணிந்து கொண்டு வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

6-ஆம் நாள் விழா விவரம்:

79,753 பக்தா்கள் தரிசனம்.

29,623 பக்தா்கள் தலைமுடி காணிக்கை.

உண்டியல் காணிக்கை ரூ.3.48 கோடி.

61.45 லட்சம் கேலன் தண்ணீா் பயன்பாடு.

4,132 பேருக்கு சிகிச்சை.

4,000 சேவாா்த்திகள் சேவை.

அரசு பஸ்களில் 1.21 லட்சம் போ் பயணம்.

முழு கட்டுரையைப் படிக்க →