திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 75,343 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,505 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.69 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT