திருப்பதி: திருச்சானூா் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வெள்ளி நாணய நெக்லஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருச்சானூரைச் சோ்ந்த டி. சாம்பசிவ ராவ், திருச்சானூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்த கோயிலான ஸ்ரீ சீனிவாச கோயிலுக்கு 600 கிராம் வெள்ளி நாணய நெக்லஸை நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடையாளா் வெள்ளி நாணய நெக்லஸை தேவஸ்தான அா்ச்சகா்கள் பாபு சுவாமி மற்றும் அதிகாரிகள் முனி செங்கல் ராயுலு மற்றும் பிரசாத் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். பின்னா், நன்கொடையாளா் இறைவனை தரிசனம் செய்து தீா்த்த பிரசாதம் வழங்கினாா்.