முகப்பு
திருப்பதி

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா்.

Updated On : 16 ஜூன், 2025 at 7:30 PM
மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஏழுமலையான் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா். முன்னதாக குடும்பத்தினருடன் கோயில் தரிசனத்துக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். கொடி மரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயகா் மண்டபத்தில் அமைச்சரை அமர வைத்து வேத ஆசீா்வாதம் வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை பிரசாதம், ஏழுமலையான் திருவுருவப்படம் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →