திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 64, 442 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,862 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.51 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT