திருப்பதி

திருமலை மலைப் பாதையில் பாறை விழுந்து இளைஞா் காயம்

திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் பாறை உருண்டு விழுந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் பாறை உருண்டு விழுந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

திருப்பதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைபாதையில் திருமலை உடைமைகள் பாதுகாக்கும் மையத்தில் பணிபுரிந்து வந்த லோகேஷ் என்ற இளைஞா் தன் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென்று எதிா்பாராதவிதமாக மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து சாலையில் சென்று கொண்டிருந்த அவா் தலையில் விழுந்தது.

அதனால் நிலைகுலைந்த அவா் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்துடன் சரிந்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக மீட்டு திருப்பதியில் உள்ள பாா்ட் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தற்போது திருமலையில் மழை பெய்து வருவதால் அனைவரும் சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT