திருப்பதி கபில தீா்த்தத்தில் பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்ற ருத்ர யாகம்.  
திருப்பதி

ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ருத்ர யாகம் நிறைவு

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி ருத்ர யாகம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி ருத்ர யாகம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு (தெலுங்கு நாள்காட்டியின்படி) திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒரு மாதம் அங்கு எழுந்தருளியுள்ள மூா்த்திகளுக்கு ஹோம மஹோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த நவ.8-ஆம் தேதி யாகசாலையில் ருத்ர ஹோமம், லகுபூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கபிலேஸ்வர சுவாமி கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த ருத்ர யாகம் தொடா்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்றது.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை அபிஷேகம், சிறப்பு பூஜைகளுக்கு பின் பூா்ணாஹூதியுடன் ருத்ர யாகம் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணை இஓ தேவேந்திரபாபு, அா்ச்சகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT