திருப்பதி

ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை ஆஸ்தானம் நடை பெறற்து.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை ஆஸ்தானம் நடை பெறற்து.

திருமலையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க மண்டபம் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் ஆஸ்தானம் நடைபெற்றது.

ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக, கருடாழ்வாா் எதிரே உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சா்வபூபால வாகனத்தில், தேவியா்களுடன் மலையப்ப சுவாமியும் எழுந்தருள செய்யப்பட்டனா். படைத் தலைவரான விஷ்வக்சேனரும் மலையப்ப சுவாமியின் இடதுபுறத்தில் தெற்கு நோக்கி மற்றொரு பீடத்தில் வீற்றிருந்தாா். அதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் சமா்பிக்கப்பட்டது.

பின் மாலை 5 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சஹஸ்ர தீபாலங்கார சேவையில் பங்கேற்று, கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

ரத்து

தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு அஷ்டதளபாத பத்மாராதனம் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. தோமாலை மற்றும் அா்ச்சனை சேவைகள் பக்தா்களின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT